17 May 2015

7 வயது குமார் ராஜ் என்ற ஆசிரியர்


குமார் ராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், மேடைக்கருகே நீண்ட நேரம் நின்று கொண்டு காவல்துறையினரை வெறுப்பற்றிக் கொண்டிருந்திருக்கிறான். காரணம் அவன் கையிலிருந்த அட்டை.

அதில் 'பேச வாய்ப்பு வேண்டும்'-என பெரிதாக எழுதி மேடையிலிருந்த நிதிஷ்குமார் காணும் வகையில் பிடித்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர் விரட்ட,விரட்ட கேளாமல் அங்கும் இங்கும் ஓடியும் எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றிருந்திருக்கிறான்.

இதைக் கண்ட நிதிஷ்குமார் அவனை மேடை ஏறச் சொல்லி பேச வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

சுமார் மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள்.

நம் நாட்டில் நிலவும் கல்வி முறை குறித்து கவலையோடு பேசியிருக்கிறான்.

ஏழைகளுக்கென ஒரு வித கல்வி முறையும்,பணக்காரர்களுக்கென ஒருவித கல்வி முறையுமென ஏன் இருவிதமான கல்வி முறைகள் இங்கே பின்பற்றப் படுகிறது? இதை மாற்ற முடியாதா?

என்றெல்லாம் பேசி, இறுதியில் தான் பிரதம மந்திரி ஆகி அனைவருக்கும் ஒரே விதமான கல்வியை வழங்குவேன் என்றிருக்கிறான்.

நிதிஷ்குமார் உள்ளிட்ட மேடையிலிருந்த அனைவரும் உள்ளத்தில் அதிர்ந்து போய் இருந்தாலும், வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தனர்.

குமார்ராஜ் புதிதாகவோ,பெரிதாகவோ எதுவும் சொல்லிவிடவில்லை தான்.
ஆனால் அதை அவன் சொன்ன இடமும், கவனிக்க வைத்த நபர்களும் முக்கியமானவர்கள்.
இப்படி அனைவரின் கவனத்தை ஈர்த்த குமார்ராஜுக்கு 7 வயது. அப்பா ஒரு வெற்றிலை வியாபாரி.

தேநீர் விற்றவர் பிரதமராக இருக்கும் போது, வெற்றிலை வியாபாரியின் மகனொருவன் பிரதமராக தடையெதுவுமில்லை எனச் சொல்லி அவனை வாழ்த்தியிருக்கிறார் முதல்வர்.

பேசிய வீடியோவிற்கான லிங்க் கீழே.

.Click here to watch the video