28 May 2015

விந்தை மனம் கொண்ட மனிதர்கள்






பஸ்ல போயிகிட்டு இருக்கப்ப, திடீர்னு பஸ் ப்ரேக் டவுன் ஆயிட்டா, பரபரப்பா அதுக்குள்ள இருக்குற சிலர் மட்டும் எறங்கி என்னாச்சுன்னு அந்த பஸ்ஸையே சுத்தி சுத்தி வருவாங்க...
நேரம் ஆக,ஆக பொறுமை இழந்து போயி எல்லாருமே கீழ எறங்கி வேற பஸ்ல போகலாமா, இல்ல இதுவே ரெடியாய்டுமான்னு பேசிக்க ஆரம்பிப்பாங்க.. முடிஞ்சா ட்ரைவரையும், கண்டக்டரையும் நக்கலடிச்சோ கோவமாவோ பேசத் தொடங்குவாங்க..

ஆனா இவ்வளோ களேபரத்துக்கு நடுப்பறையும், சைலன்ட்டா ஒருத்தன் சென்டர் சீட்ல உக்காந்து தூங்கிகிட்டு இருப்பான்.

அவன மாதிரி ஆயிடுது சமயத்துல என் நெலமையும்.

எதையுமே கண்டுக்காமையும் போக முடியல. எல்லாத்தையும் கண்டுக்கவும் முடியல.

நல்லா போயிகிட்டு இருக்குற என் பஸ்ஸ, சுத்தி சுத்தி வந்து வேடிக்க பார்த்தே ஓட விடாம பண்ண நெனைக்கிறாங்க சிலர்.

-எனக்கென்னமோ, 'இந்த கடையையும்' சீக்கிரமா மூடிடுவேனோன்னு தோணுது. மறுபடியும் டைரியிலயே எல்லாத்தையும் எழுதி மூடி வச்சுப்பேன்னு நெனைக்கிறேன்.

#பீலிங் சந்தோசம்!