14 Jul 2015

உன்னை நானறிவேன்




1991 ஆம் ஆண்டு வெளிவந்த குணா படம், தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி இந்தியா முழுதும் பல்வேறுவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை வாலி எழுதினார். இளையராஜா இசையமைத்தார்.
மின் விசிறியின் சப்தத்திலிருந்து 
'வரும்...வரும்... வரும்...' -என கமல் அழகாக டியூனை ஆரம்பித்து வைப்பார்.
ரேகா அருகில்.... கமலின் கண்களில் கசியும் கண்ணீரை மெல்லத் துடைத்து பாட ஆரம்பிப்பார்.
எஸ்.ஜானகி அதி அற்புதமாகப் பாடியிருப்பார்.
இடையில் ஒரு கஜல் போன்ற இசை.
தொடர்ச்சியாக ஒரு துள்ளல் இசையோடு முடியும்.
இப்பாடலை கேட்பவர்கள் யாராயிடினும், கண்களோ உள்ளமோ கசியாமல் இருக்க முடியாது.
அதுவும்,
"தேவன் என்றால் தேவன் அல்ல
தரை மேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல
என்னைப் போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை ....."
எனப் பாடி,
"ஏன் தான் பிறந்தாயோ
இங்கே வளர்ந்தாயோ
காற்றில் நீ ஏன் சேற்றை வாடைக் கொள்ள வேண்டும்"- என உண்மையிலேயே உச்சரிப்பில் ஏக்கத்தைக் கொண்டு வந்து கொட்டியிருப்பார் ஜானகி..
'கீரவாணி' ராகத்தில் அமைந்த பாடலிது..
முடிந்தால் கேளுங்களேன்!