14 Jul 2015

இவன் தான் பாலா


வாய்ப்புகள் எதுவுமே இல்லாமலிருந்த காலமது.

படித்து முடித்த சான்றிதழ்களோடு பேருந்துகளிலும்,சைக்கிளிலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அயராது வலம் வந்திருக்கிறேன்.

உதவி செய்து தூக்கிவிட நிறையபேர் சுற்றி இருந்தும் வேடிக்கை பார்த்தனர். என் வாழ்வின் பாடப் புத்தகங்கள் அவர்கள்.

ஆணவமில்லாது,பணிவோடும் துணிவோடும் எப்படி நடக்க வேண்டுமென கற்றுக் கொண்டிருந்த காலமது.

'பலதும் கற்கப் பண்டிதனாவான், கண்டதைத் தின்றால் குண்டனாவான்' - என நண்பர்கள் கிண்டலுக்குச் சொல்வார்கள்.

'கடை' கண்ணில் கிடைத்ததையெல்லாம் வாங்கி நிறைய தின்று பார்த்தேன். வயிற்று வலிக்காக மருத்துவரிடம் சென்று இரட்டிப்பாய் செலவழித்தனர் பெற்றோர்.

பலதும் கற்றுப் பார்ப்போமென படிக்க ஆரம்பித்த தொடர் தான் 'இவன் தான் பாலா'

வீட்டில் எட்டாவது பிள்ளையான இவர் தாய் தந்தையிருந்தும் தன் அத்தைக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.

வீட்டில் அப்பா சட்டைப் பை, அம்மாவின் அஞ்சரைப் பெட்டி,பாட்டியின் சுருக்குப் பையென தேடிக் காசு திருடிய கதை, சிகரெட் பிடித்தது, கஞ்சா குடித்தது, வீட்டில் வளர்த்த லெட்சுமி மாடு, ஜானி ஆடு என அவரின் ஆன்மாக்கள்- இப்படி வாழ்வில் எல்லா தருணங்களையும் ஒன்று விடாமல் வெளிப்படையாய் சொல்லியிருப்பார்.

ஜெயகாந்தனின் உரை அவரது வாழ்வை மாற்றியபடியே என் வாழ்வை மாற்றிய டா'ப்டென்' நபர்களில் பாலாவும் ஒருவர்.

திறமை இருந்தால் எத்தனை தடையிருந்தாலும் முன் வந்துவிடலாமென்ற நம்பிக்கை வெறி என்னை இன்னமும் ஆக்ரமித்து நிற்க இவனும் ஒரு காரணம்.

அன்பைத் தேடியே பயணித்த ஒரு சிறுவனுக்கு இன்று தமிழ் மக்கள் அனைவரும் சொந்தம்.
அவருக்கு இன்று பிறந்த நாள். பல்லாண்டு வாழட்டும்.

பல பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புத்தகத்தின் லிங்க் கீழே..

https://docs.google.com/a/battinews.com/file/d/0Bx-I9QobHmUIN3pvd0RXM3pmYlE/edit?pli=1