1 Jul 2015

யாகாவாராயினும் "நாய்" காக்க...

"ஏண்டா.. நாயே!"
-என யாராவது யாரையாவது கோபமாகத் திட்டினால், திட்டுபவர் மீது எனக்கு கண்டபடி கோபம் வருகிறது.
நாய்களைக் கண்டு பயம் கொள்பவர்கள், அறியாமையால் தான் அப்படிச் செய்கிறார்கள் எனலாம்.
நாய்கள் மிகச் சிறந்த அறிவாளிகள். மனிதனுக்கு இணையாகவோ அல்லது மனிதனையும் தாண்டியோ சிந்திக்க வல்லவை.
உலகிலேயே மிகவும் புத்திசாலியான மற்றும் அசுர வேகம் படைத்த நாய்களினம் எது தெரியுமா?
"சிப்பிப்பாறை"-என்ற இனம் தான். இதனது பூர்வீகம் தஞ்சாவூர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தஞ்சை பெரியக் கோவிலில் காணப்படும் சிற்பங்களிலும்,ஓவியங்களிலும் நாயின் உருவத்தைக் காணலாம்.
நாய்கள் குறித்த தகவல்களை நிறைய எழுதலாமென நான் நினைத்திருப்பதால்,
"ஒனக்கேண்டா நாயே இந்த வேண்டாத வேலை" என யாரும் மனதுக்குள் திட்ட வேண்டாம்.
புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் T.S.Eliot அவர்களின் "A dog is a dog" - கவிதை படித்ததுண்டா?
முடிந்தால் வாசியுங்கள். சொல்கிறேன்.
அதுவரை........
"யாகாவாராயினும் 'நாய்' காக்க..."