14 Jul 2015

RIP -MSV




M.S.விஸ்வ நாதன் அவர்கள் 1928 ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தார். இவருக்கு 4 வயதான பொழுது தன் தந்தையை இழந்தார்.
குடும்ப வறுமையின் காரணமாகவும், ஆதரவற்ற நிலையினாலும் இவரது தாய், MSV யோடு தற்கொலைக்கு முயல, MSV யின் தாத்தாவால் காப்பாற்றப்பட்டார்கள்.
குடும்பத்தைக் காப்பாற்ற திரையரங்கினுள் தின்பண்டங்கள் விற்றிருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் முதல்மேடை ஏறியபோது அவருக்கு வயது 13.
1952 ஆம் ஆண்டு ராமமூர்த்தியோடிணைந்து 'பணம்' படத்திற்காக முதலில் இசையமைத்தார். இந்த ஜோடி சுமார் 100 படங்களுக்கு இசையமைத்தது.
1963 இல் இந்த இசை இரட்டையர்களுக்கு 'மெல்லிசை மன்னர்கள்' என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் வழங்கினார்.
1965 இல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி பிரிந்து தனித்தனியே இசையமைத்தது.
MSV முதலில் பாடகராகவும், நடிகராகவும் தான் ஆசைப்பட்டார். பின்னாளில் அதையும் செய்தார்.
2012 ஆம் ஆண்டு திரை இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். கூடவே 60 பொற்காசுகளும், ஒரு காரும் வழங்கப்பட்டது.
இசையமைப்பாளராக இவரது எத்தனையோ பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
'சங்கமம் படத்தில் ஆலால கண்டா,ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க...' - இவரது பாடும் திறனை சமீபத்திய தலைமுறைக்குக் காட்டினாலும்,
' நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இவர் பாடிய,
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்
சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம்
(சிவ‌ ச‌ம்போ!)
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்
நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம்
(சிவ‌ ச‌ம்போ!)
-என்ற பாடலில்
"ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் என்னாளும் ந‌ன்னாளாம்
ம‌றுநாளை எண்ணாதே இன்னாளே பொன்னாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் 90 என்னாளும் 16"
-என்ற வரிகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
'கன்னத்தில் முத்தமிட்டால்'-திரைப்படத்திற்காக இவர் பாடிய,
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மாற காடே
பறவைகள் கூடே
மறு முறை,ஒரு முறை பார்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர் வலம் போகின்றோம்
-என்ற வரிகளை நினைவு படுத்திப் பார்த்துக் கண்ணீர் மல்க விடை கொடுப்பது உங்கள் பூத உடலுக்கு மட்டும் தான். இவ்வுலகின் கடைசி தமிழனிருக்கும் வரை, உங்களது இசை அதன் இனத்தோடு கலந்திருக்கும்.