5 Sept 2015

பாயும் புலி




வழக்கமான மொக்கைப் படங்களுக்கான ஓபனிங்கோடு தொடங்குகிறது இந்தப் படம்.

மிகக் கொடூரமான நாடகத்தனமான நகர்த்தல் ஆரம்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூடாகி பாட ஆரம்பிக்கும் 'மர்பி மோனோ' ரேடியோவாய் வேகமெடுத்தது.

"ஒரே வீட்டுக்குள் அண்ணன் தம்பியாய் வளரும் திருடனும்,போலீஸும். அண்ணன் தான் திருடனென க்ளைமாக்ஸில் கண்டறியும் தம்பி போலீஸ். "

- வெரி ஸ்மால் லைன் யூ நோ...

பட் இந்த லைன, எவ்வளோ அழகா சுசீந்திரன் செஞ்சிருக்காருன்னு ஸ்க்ரீன்ல பார்த்தா புரியும்.

காஜல் இன்ட்ரோ சீன் செம்ம... ரோட்ட க்ராஸ் பண்ண பயப்புடுற, டூவீலர்ல வளையறப்ப மட்டும் எறங்கித் தள்ளுற ஒரு புள்ளைய எம்புட்டு அழகா காட்டிருக்காரு தெரியுமா? 
அதும் 'யார் இந்த முயல்குட்டி' மெலோடி சாங்....
இவ்ளோ பொருத்தமா ஒரு சிச்சுவேஷன் சாங் தர்றவே முடியாது.

வேல்ராஜ் கேமராவும், இமானோட இசையும் 'மல்லிப் பூவையும்,கனகாம்பரத்தையும் நெருக்கிக் கோர்த்த பூ மாலையா இருக்கு.

"சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்க வா...
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேர வா.."
-வெல்கம் பேக் வைரமுத்து...

"சூடான மோகினி"க்கு -கோரியோக்ரபி மட்டும் நல்லாருக்கு... யாருப்பா அது?

இது வில்லன்களின் காலம் போல... 'தனியொருவன்' ல அர்விந்த்,ஜெயம்ரவிய சாப்ட்டா மாதிரி, இங்க விஷால, சமுத்திரக்கனி தூக்கி சாப்ட்ருக்கார் பெர்ஃபார்மென்ஸ்ல..

மோசமான ஆட்சியாளர்களின் ஆக்கத்திற்கு காரணமே, காசு வாங்கி ஓட்டுப் போடும் மக்கள் தான்-என்ற உண்மையை இதை விட வலிக்கும் வசனங்களால் சொல்லிவிட முடியாது.

-என்ன சொன்னாலும் கடேசி வரைக்கும் எதோ சில விஷயம் இந்த படத்துல மிஸ் ஆகிட்டே இருக்கு..

அதுக்கு முக்கிய காரணம், படம் ரிலீஸ் பண்ணுன தேதி..

வெறும் 75 நாள்ல எடுத்த இந்தப் படத்த, ஒரு 7 நாள் முன்னாடி ரிலீஸ் பண்ணிருந்தா, கண்டிப்பா இன்னும் வசூல் எகிறிருக்கும்.. 'தனியொருவன்' முன்னாடி வந்து தண்ணி காட்டிட்டான்.

-'பாயும் புலி' நிச்சயமாக சீக்கிரம் சுருட்டிக் கொள்ளாது.