5 Sept 2015

கூகுளின் சுந்தர் பிச்சை



"New CEO of Google is Mr.Sundar Pichai"

43 வயதே நிரம்பிய சென்னையைச் சார்ந்த சுந்தர் பிச்சை, வனவாணி மெட்ரிக் பள்ளியில் பயின்றவர்.

IIT காரக்பூரில் இஞ்சினியரிங் முடித்தவர்.

2004 ஆம் ஆண்டு கூகிளில் சேர்ந்தார்.

அதிக அளவுள்ள ஃபைல்களை அனுப்ப நாம் தற்போது பயன்படுத்தும் கூகிள் ட்ரைவைக் கொண்டு வந்ததில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.

மேலும் ஜிமெயில், கூகிள் மேப்புகளிலும் பல புதுமைகளையும் மாற்றங்களையும் கொண்டு வந்தார்.

2013 இல் கூகிள் தயாரிப்புகளுள் ஆன்டிராய்டை சேர்த்தார்.

மிக முக்கியமாக WebM என்ற வீடியோ ஃபார்மேட்டை அறிமுகப் படுத்தினார்.

இவரது மனைவி பெயர் அஞ்சலி.
ஒரு மகனும்,மகளும் உள்ளனர்.

-வாழ்த்துகள் தமிழா! சாதனைகள் தொடரட்டும்..