5 Sept 2015

கலாம் காலம்




மேகத்தோடு கலந்தது
மேகாலயாவிற்குப் பறந்த
எங்கள் அக்னிச் சிறகு.

காட்சிக்கு எளியனே!
அறிவிற்கே அறிஞனே!

வெள்ளத் தனைய மலர்நீட்டக் குறள் சொல்லி,
மாந்தர் தம்
உள்ளத்தனைய துயர்ந்தவனே!

தாய்மொழியாம்
தமிழ்மொழியை
தரணியெங்கும்
உரைத்தவனே!

பொக்ரான் நிலத்தில்
புத்தரை சிரிக்க வைத்தவனே!

காலமெல்லாம்
கனவு காணச் சொன்னவனே!

சொல்லரசுகளுக்கு மத்தியில்
வல்லரசிற்காய் தன்னையே
வருத்திக் கொண்டவனே!

இந்தியச் சரித்திரத்தின்
ஈடில்லா அத்தியாயம் நீ!

இதயமிலா மனிதனுக்கும்
இன்முகம் மலர்ந்தோனே!

மரணதண்டனைக் கெதிரான
உன் முழக்கம்
மனிதர்களைத் தொட்டிற்று.

மாணவர்களின் சீருடையே!
இளைஞர்களின் கடைசிக்
கையிருப்பே!

காலனோடு மல்லுக்கட்ட
காலம் கடத்தியதேன்?

பாசக் கயிறென்றதும்
பட்டனெ ஓடினாயோ?

மங்கள்யான் பயணம் காண,
மரணித்தா செல்வது?

என்றென்றும் எங்களின்
சுற்று வட்டப் பாதை நீ!

நீ இட்ட பாதையில்
இறுமாப்பாய் சுற்றி வந்தோம்.

இளைப்பாறச் சென்றவனே
இலக்கினைச் சொன்னாயோ?

யாதும் ஊரே யாவரும் கேளிரென்றாய்.

யாதுமாகி நின்றவனே!
யாரிடம் சென்று சேர்ந்தாய்?

குரானும் கீதையும்
இரு கண்ணாய்க் கொண்டவனே!

ராமேஸ்வர நபியே!

எந்த மதமானாலென்ன?
-உனைத் தீண்டிய மரணத்திற்கு
மன்னிப்பேயில்லை.

காலச் சக்கரமொன்றை
காலத்தே செய்து முடித்து,
கடவுளே வியக்கும் வண்ணம்
கலாமே உனை மீட்டெடுப்போம்.

தூங்க விடாதது கனவென்றாய்.
அக் கனவின் மறுபெயர் கலாம் நீயேதான்.