9 Dec 2015

நானும் ரௌடிதான்



இலங்கையின் "லைக்கா" தயாரிப்பில் சர்ச்சையில்லாமல்...

போலீஸ்கார அம்மாவின்(ராதிகா) மகன் பாண்டி (விஜய் சேதுபதி). அம்மா தன் மகன் போலீஸாக வேண்டுமென மெனக்கெட, மகனோ ரௌடிக்குத் தான் மவுசு அதிகமென ரௌடியாக உருவெடுக்க மெனக்கெடுகிறார்.

மெயின் வில்லன் கிள்ளிவளவன்(பார்த்திபன்) நேர்மையான காவலர் அழகம் பெருமாளின் மனைவியை பார்சலில் குண்டு அனுப்பிக் கொல்ல, மகள் காதம்பரிக்கு ( நயன் செல்லம்) காது கேட்காமல் போய்விடுகிறது.

அப்பா அழகம் பெருமாளையும் கிள்ளி கொல்ல, அனாதையான காதம்பரிக்கு அட்ரெஸ் பார் ஆகிறார் பாண்டி.

பார்த்திபனுடன் ஆனந்தராஜ், மன்சூர் அலிகானும் குட்டி வில்லன்களாக.

கூடவே கர(ல)கர(ல) ஆர்.சுந்தர்ராஜனும்.

ஃபேஸ்புக் ட்ரெண்டிங் போல எந்நேரமும் நயனுக்கு 'நச்' கொடுக்கும் நினைப்போடிருக்கும் சேதுபதியின் Selva Kumar அண்ணன் கவிதைக் கருவிற்கு,

தன் அப்பாவைக் கொன்ற பார்த்திபனைக் கொல்ல சேதுபதி உதவினால் தான் தன்னை அவன் 'கொள்ள' முடியுமென முத்தக் கனவை மொத்தமாய் ம்யூட் செய்கிறாள்.

கொன்றானா,வென்றானா,மென்றானா என்பதைச் சொன்னால் படம் காண்பதில் ஸ்வாரஸ்யமிருக்காது.

வெல்கம் பேக் பார்த்திபன்,விஜய் சேதுபதி, அனிருத் அன்ட் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

'போடா,போடி'க்கு அப்பறம் ஒரு படம். ஆனா அதேபோல கிட்டத்தட்ட காமெடி அண்ட் டைமிங் டயலாக்ஸ்க்கு முக்கியத்துவம் குடுத்து ஒரு படம் டைரக்டர்!

பார்த்திபனுக்கு சாதாரணமாகவே பேசத் தெரியாது. இதில் அவரது நாவில் வசம்பை வண்டி நிறைய தோய்த்தார் போல்.

தனித்துவத்துல இன்னும் எத்தன நடிகர்கள் பிறந்து வந்தாலும் ஒங்கள அடிச்சுக்க முடியாது சாரே!

"ப்ப்பா, அய்ய்யோ, என்னாச்சி, சூப்பர் ஜி" போன்ற வசனங்கள் விஜய் சேதுபதியின் பெயருக்கான பொழிப்புரை.

நயன் ஒரு கட்டத்தில், பெரிய ரௌடி ஒருவன் வேண்டுமென சேதுபதியைக் கேட்க, ஆர்ம்ஸ் காட்டி, டெரராய் முழியை உருட்டி தன்னை நயனிடம் ரௌடியாக காட்டிக் கொள்ளும் மெனக்கெடலில் சேதுபஹிஹிஹி...

ஆர்.ஜே.பாலாஜியின் டைமிங் டயலாக்ஸ் அப்லாஸில், நாற்காலிகள் நடனமாடுகின்றன.

இரவு நேர வாட்ஸ் அப் அப்டேட் சவுன்ட் போல, விடாத காமெடி அப்டேட்கள் படம் முழுக்க..

க்ளைமாக்ஸ் கமலின் 'மைக்கேல்,மதன,காமராஜ' குபீர்!

அனிருத்தின்,

'தங்கமே, நீயும் நானும், நானும் ரௌடிதான், என்னை மாற்றும் காதலே,கண்ணான கண்ணே'-பாடல்கள், ஆன்ட்ராய்ட் போனில் ஆல்ரெடி இருக்கும் அத்தனையையும் அழித்துவிட்டு திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டுபவை.

பின்னணி இசையில் ஆங்காங்கே "செரிலாக்கின், செர்ரி ஃப்ளேவர் டேஸ்ட்!" - ச்சோ க்யூட் அன்னி...

நயன்- அழகின் அகரமாய்..

படாரென 20 வயதைக் குறைப்பதெப்படி என நயன் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் விஜயதசமி போனாலும், விரைந்து முதலில் சேர்வது நான் தான்.

"ப்ப்பா..." -உன் அழகின் வாசனை ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் கேமராவில் என்றென்றும் ஒட்டியிருக்கும்.

காது கேளாத காதலியாய், காதலன் சேதுபதியின் வீட்டில் அமர்ந்திருக்க, காதலன் சாப்பாடு வாங்கி வந்து பின்புறமாய் கதவைத் திறக்க, சற்றும் சலனமின்றி அமர்ந்திருக்கும் நயன், சைடில் சேதுபதி வந்ததும் சட்டெனத் திரும்புவார்.

டைரக்டரே கதாபாத்திரத்த மிஸ் பண்ணிருந்தாலும் நீ பண்ண மாட்டேன்னு 'ராஜாராணிலயே தெரியும் நயன்.

நெருடல்:

டபுள் மீனிங் வசனங்கள் பார்த்திபனுக்குப் பழசு தான். பாலாஜிக்கும் கூட.

சேதுபதிகிட்ட ஆச்சர்யம்.

குடும்பத்தோட உக்காந்து கொஞ்சம் கூட நெளியாமப் பார்த்தா, 'நெட்கார்ட் 600MB ஃப்ரீன்னு அறிவிக்கலாம்.

சென்சார் போர்ட்!

கட்டிங் தந்துட்டாங்களா? சாரி கட்டிங்லாம் இல்லியா?

Excuse me! What is the procedure to issue 'A' Certificate?

நண்பர்களுடன் சென்று பார்க்க ரௌடியும் சிரித்து ப்ரெஷர் நீங்க வெளிவருவான்.