9 Dec 2015

தஞ்சையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி




தஞ்சாவூரில் ஆர்வமிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி வழியில் மென்பொருட்களைப் பயன்படுத்தி சிறப்பாக பாடம் கற்பிக்க வைப்பதற்கான அடிப்படைப் பயிற்சியும், வலைப் பூக்களை உருவாக்குதல் மற்றும் விக்கிபீடியாவில் தமிழில் கட்டுரைகளைப் படைத்தலுக்கான பயிற்சியும் மூன்று நாட்கள் SCERT, DIET வழியாக வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்ற ஆசிரியர்களின் ஆர்வம் என்னை வியக்க வைத்தது. வீடு திரும்ப மனமில்லாமல், மதிய உணவுக்கும் உடனே செல்லாமல் அமர்ந்து தொடர்ந்து கற்றனர்.
50 மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதைக் காட்டிலும், 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தலும், ஊக்கமூட்டுதலும் மிகவும் முக்கியமான தொடர்ச்சியாக பயனளிக்கக் கூடிய ஒன்றாகும் என்பது என் கருத்து.
50 மாணவர்கள் வகுப்பில் பாடம் கற்று அடுத்த வகுப்புக்குச் சென்று விடுவர்,
50 ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி அளித்து ஆர்வமூட்டினால், அந்தப் பயிற்சியின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 மாணவர்கள் வரை சராசரியாகப் பயனடைவர் என்பது உண்மை.
அந்த குறிப்பிட்ட ஆண்டோடு கற்றதை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அப் பயிற்சி ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இப்போது நாம் கணக்கிட்டுப் பார்த்தால் பலன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.
-சொல்லப் போனால், இது சவாலான பணியாக இருந்தாலும், என்னை நானே மேலும் வளப்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் எனக்களிக்கும் வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.
ஒரு நல்ல தரமான ஆசிரியருக்கான அளவுகோல் என்பது அவர் தொடர்ந்து கற்றலில் கொண்டுள்ள ஆர்வத்தைப் பொறுத்தே அமைகிறது.
கற்போம்,கற்பிப்போம்...
கருத்தாளர் பெருமக்களுக்கும், தஞ்சைக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.