10 Dec 2015

மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி






மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி வழிக் கற்பித்தல் குறித்தான பயிற்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.

தொழில் நுட்ப உதவியோடு புதிய முறையில் கற்பித்தல் பணியை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தான பயிற்சி இது. SCERT வாயிலாக இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிற பயிற்சிகள் போல் இல்லாமல் இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

காலை 10 மணி தொடங்கும் பயிற்சிக்கு 9 மணிக்கேகே வந்துவிடுதலும், தேநீர் இடைவேளை,உணவு இடைவேளை போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டாமல் ஆசிரியர்கள் அமர்ந்து கற்றது ஆச்சர்யமளித்தது.
மாலை பயிற்சி முடிந்த பிறகும் வீடு செல்ல மனமின்றி சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.

மேலும் கற்க வேண்டுமென்ற அவர்களது ஆர்வம் வீடு போய் சேர்ந்த பின்னரும் இரவு 10:30 மணி வரை வாட்ஸ் அப் குழுவில் விவாதித்தலிலிருந்து உறுதியானது.

பயிற்சியாளராக எனது 11 ஆண்டுகால அனுபவத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே இதுபோன்றதொரு ஆர்வத்தையும்,ஈடுபாட்டையும் ஒருபோதும் கண்டதில்லை.

மாணவர்களுக்கு ஒரு பாடத்தை அறிமுகம் செய்யவும், கற்பிக்கவும், மதிப்பீடு செய்யவும் புதிய மென்பொருட்களைக் கொண்டு கணினியில் தயார் செய்வது எப்படி என்ற கலையை எங்களால் இயன்ற அளவிற்கு முழு ஈடுபாட்டோடு நானும் Jeyaselvan Dharmarajan அவர்களும் செய்தோம்.
வலைப்பூக்களை உருவாக்குதல்,விக்கியில் தமிழில் கட்டுரைகள் எழுதுதல் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

50 ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி 500 லிருந்து 5000 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சென்று சேர வேண்டுமென்று விரும்புகிறோம்.

எங்களது கடமையைச் செய்ய நம்பிக்கையோடு அனுமதி அளித்த இயக்குனர், இணை இயக்குனர்கள், Asir சார் உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள்,மாநிலக் கருத்தாளர் Uma Maheswari Gopal அவர்கள் மற்றும் நண்பர் Suresh Numismatist ஆகியோருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகள்.
-தமிழகத்தின் எந்த மூலையில் வசிக்கும் குழந்தைக்கும் தரமான கல்வியைக் கொண்டு சேர்க்கும் வரை, இந்தப் பயணம் ஓயாது. இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய பணியில் சேர்ந்த போதே உறுதி பூண்டு தான் வந்துள்ளோம்.

எத்துணை தடைகள் வந்தாலும், அதை எதிர்கொண்டு நிற்கத் தயாராக இருக்கிறது எங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் புதிய தலைமுறைப் படை!