6 May 2009

சித்ரா பௌர்ணமி



  • மஞ்சளையும் பௌர்ணமியையும்
    ஒரு குழப்பமான விகிதத்தில்
    அள்ளி அப்பிக்கொண்டு
    மெல்லப் புறப்படும் பௌர்ணமி

  • நண்பர்கள் புடை சூழ, நானும் பௌர்ணமியை
    காணப் போவேன்

  • நம்மை விட பௌர்ணமி
    பளபளப்பாக இருக்கும்

  • பயணத்தின் போது
    பௌர்ணமியின் தோழிகள்-
    பொட்டும், பொடிசுமாய்
    சம்பந்தமே இருக்காது

  • அலுப்புத் தெரியாமல் இருக்க
    பௌர்ணமி மனசுக்குள் பாடும் பாட்டு
    எனக்கு மட்டும் கேட்கும்

  • உங்களுக்கெல்லாம் பௌர்ணமி எப்படியோ
    எனக்கு சித்ரா தான்
    என்றைக்கும் பௌர்ணமி!

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!