
- அந்தரத்தில் மிதக்கும் உனக்கு
அளவிலா குழந்தைகள்
அங்குள்ள அரசாங்கம்
அதனை ஆமோதித்ததோ? - அழகான உன் மேனியிலும்
ஆங்காங்கே சில திட்டுக்கள்
அங்கேயும் நோய் உள்ளதன்
ஆரம்ப அறிகுறியோ? - மனிதன் அங்கு வந்து
மண்ணை தொட்டதன் விளைவோ? - கணவனுடன் சந்திப்பு
கண நேரம் வருடத்தில்
அந்நேரம் பூமியினில்
அடங்காது ஆர்ப்பரிப்பு
- அது தான் கிரகணமோ?
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!