2 நாளைக்கு முன்னாடி, அதாவது செப்டம்பர் 21 ம் தேதி,
தானைத் தலைவர்,
தங்கத் தமிழர்,
இதய தெய்வம்,
மனிதருள் மாணிக்கம்,
உலகின் ஒரே விடிவெள்ளி,
இளைஞர்களின் கலங்கரை விளக்கம்,
[ அய்யயோ.. அவசரத்துல இதுக்குமேல தோனலையே...]
- இப்டில்லாம் எப்பயுமே கூப்பிடப் படாத..
கூப்பிடப் பட முடியாத..
நான்... ..நானே தான் ...
எனது பிறந்த நாளைக் கொண்டாடினேன்.
அன்றைய எனது நிகழ்வுகளில் சில..
1. காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து வந்து, தஞ்சை பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள சாந்தி பரோட்டா கடை வாசலில் காலை வைத்து இறங்கினேன்.
2. சகோதர, நண்ப. மாணவன் கோபி [அவன எப்டி கூப்டாலும் கொவிச்சுக்குறான்] உதவியால் இரு சக்கர வாகனத்தை பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்து, பிறந்த நாளும் அதுவுமாய் தவறி கண்ணாடி பார்க்கப் போய், என்னை பார்த்து நானே சகிக்க முடியாமல், அப்படியே வண்டியில் சலூன் கடை சென்று [சாரி ராஜேந்திரன்.. நீங்க எத்தனையோ தடவ பியூட்டி பார்லர் நு சொல்ல சொல்லியும் அப்டித்தான் வருதுங்க, அப்டி சொல்லனும்னா எனைய கொஞ்சமாச்சும் அழகாக்குங்க]
கட்டிங் அண்ட் சேவிங் செய்து வீடு ,திரும்பி புரட்டாசியும் அதுமா முடிய வெட்டிகிட்டு வருது பாரு .... என்ற இல்லத்தாரின் வசவுகளை வாழ்த்தாய் பெற்று ... குளித்து முடித்து பாத் ரூம் விட்டு வெளியில் வந்தேன்.
3. தைக்க கொடுத்திருந்த புத்தாடையை டைலர் கடைக்கு சென்று வாங்கி வந்து அணிந்து கோவிலுக்கு செல்வோம் என முடிவு செய்து , சுமாரான உடையணிந்து தையல் கடை சென்றேன்... ஆகா ... ஆனந்தமான செய்தி என்னை அன்போடு வரவேற்றது..
" ரம்ஜானை முன்னிட்டு இன்று மட்டும் கடை விடுமுறை.. ரம்ஜான் நல்வாழ்த்துகள்"
ரொம்ப்ப சந்தோசம்...
என்னதான் நீ ரைமண்ட்ஸ்ல 3000 ரூவாய்க்கு துணி எடுத்து தைக்க குடுத்தாலும்... தச்சு வாங்குற அன்னைக்கு கட தொரந்துருந்தா தான் நீ தீபாவளி பொங்கல் பொறந்த நாள் எல்லாம் புது ட்ரெஸொட கொண்டாடலாம். .. - ச்ச... சூப்பர்டா பிரபோ ...அவ்ளோ டேன்சன்லையும் தத்துவத்த தடம் மாறாம சொல்றடா...
[ சனியன் எப்பயுமே எனக்கு ஷைன் ல தான் வருது... தப்பா நெனைக்காதீங்க... எண் வண்டி பேர் ஷைன்... அத சொன்னேன்.]
3. பொறுத்து பொறுத்து பார்த்தேன்... எந்த புன்னியவானாச்சும் நமக்கு போன் பண்ணி விஷ் பண்றானான்னு... ம்ஹ்ஹ்ம்... கூட பொறந்த பாவத்துக்கு அக்கா போன் பண்ணி வாழ்த்து சொல்லிச்சு.. எதிர் பாத்த நண்பர்களில் இருவர் பண்ணுனாங்க.. அவ்ளோ தான்..
4. எப்படியாச்சும் இவங்கள பழி வாங்கணும் நு கீழ உள்ள sms அ ரெடி பண்ணி அசிங்கப் படுத்தனும்னு நெனச்ச்வனுக்கெல்லாம் அனுப்புனேன்..
இன்று என்னுடைய 25 வது பிறந்த நாள் [ நம்ப முடியாட்டி அஞ்சோ பத்தோ கொரச்சுக்கங்க..]
flex,poster, notice, tv advt. - இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்ற ஒரே காரணத்துக்காக நீங்க இதெல்லாம் செய்யாம இருந்ததுக்கு ரொம்ப நன்றி..
அதுக்காக ஷோ கேஸ் ல வைக்கிற மாறி பொம்மையோ, செல்ப் ல அடுக்குற மாதிரியான புக்கோ ... தயவு செஞ்சி வாங்கிகிட்டு வராதீங்க. ஏதோ உங்க சக்திக்கு தகுந்தா மாறி ,, அர பவுனோ , ஒரு பவுனோ செயின் இல்லனா ப்ரெஇஸ்லெத் [ஆலுக்காஸ் ல நெறைய புது மாடல் இருக்கும்] வாங்கிகிட்டு வீட்டுக்கு வாங்க... உங்களுக்காக வெய்ட் பண்றேன் ....
- இதான் நா அனுப்புன sms ...
அதுக்கு அவனுங்கள்ள சில பேர் வித்யாசமா ரிப்ளை பண்ணுனாங்க..
- உங்க அம்மா என்ட அடிக்கடி சொல்வாங்க.. பிரபுவ விட நீ 7 வயசு கம்மியா தெரிரடானு.. அது ரொம்ப சரி நு ஒருத்தன்..
- ஜோக் அடிக்காத .. உனக்கு இன்னும் பத்து வயசு கூட நு இன்னொருத்தன்..-
2009 ல சரியான காமெடி இதாண்டா நு ஒருத்தன்...
- மீதி எல்லாரும் சத்தியமா நா சொன்னாத ஜோக் நு நம்பிகிட்டு எந்த ரெஸ்பாந்ஸும் பண்ணலைங்க...
ஐயோ.. சாகடிக்கிரானுன்களே...
எனக்கு பொறந்த நாள் வரது ஒரு குத்தமாடா...
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!