
மதுரை ..... பேர காதுல கேக்கயிலல்லாம், எனக்கு என்னமோ பண்ணும்..
நா இதுவர மிதிக்காத மண்ணு..
போக அதிகமா ஆசப் பட்ட ஊரு...
வாய்ப்பே கெடய்க்காம இருந்துச்சு..
சாகுரதுக்குள்ள மதுர மண்ணமிதிக்கலன்னா..
அடுத்த ஜென்மத்துல கழுதையா பொரக்கனும்டா...! -
- போற வர்ற பெருசெல்லாம் ... இத வேற சொல்லி பயமுருத்துசுக...
என் மாவட்டதுலேர்ந்து , ஆசிரியப் பயிற்றுனர்கள் சார்பா , என்னை அனுப்பிருந்தாங்க..
பயிற்சில பெற்ற அனுபவம் தொடர்பா சொல்லனும்னா .. ஒரு தனி வெப்சைட் தான் தொடங்கணும்..
எத்தனையோ பயிற்சிகள், கூட்டங்கள்ன்னு மா நிலம் மற்றும் நாடு முழுக்க போயிருந்தாலும் இந்த பயிற்சி எனக்கு ரொம்ப முக்கியமான மறக்க முடியாத ஒண்ணு.
ஏன்னா..... என்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையைவே திசை மாற்றி புரட்டிப் போட்ட பெருமை, இந்த ட்ரெயினிங்கிற்கு மட்டும் தான் உண்டு.
#விதி
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!