போன பதிவுல என்னோட பேராசிரியர்கள் பத்தி சொல்றதா சொல்லிருந்தேன். அதுல ஒரு அய்யா பேராசிரியர் B.R.வீரமணி அவர்கள்.
இன்னும் நினைவிருக்கிறது... அது 1994 ஆம் ஆண்டு. நானும் என் நண்பர்கள் வெற்றிசெல்வன் [இப்போது வழக்கறிஞர்], குணாநிதி[இப்போது பேராசிரியர்] உட்பட நண்பர்கள் இளங்கலை முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் பயின்ற அப்பொழுது தான் அந்த கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியில் சேர்ந்திருந்தார். அமைதியான தோற்றம், கனிவான முகம், முகத்தில் எந்நேரமும் தவழும் புன்னகை- இவை தான் அன்னாரின் முகவரி.
மாணவர்களுக்கு கல்லூரியில் பேராசிரியர்களைக் கண்டாலே ஒரு வித பயம் வரும். ஆனால் இவரைக் கண்டால் சத்தியமாக பயம் வராது. பழகுவதில் அத்துணை இனிமையானவர் சார். இவரைக் கண்டால் பயம் இருக்காதே தவிர, மரியாதை கண்டிப்பாக இருக்கும். அதற்கு அதி முக்கிய காரணம் மொழிப் புலமையும், இலக்கியத்தில் நாட்டமும்.
மனசுல பட்ட விஷயங்கள பட பட ன்னு சொல்லிடுவேன்... நான் எப்பவும்...
எனக்கு தெரிஞ்ச வர இவங்கள பத்தி சொல்றேன் ..
இந்த போஸ்ட சார் பாக்குறது சந்தேகம் தாங்க. அவங்க ரொம்ப பிஸி நெஜம்மாவே. அவங்க படிக்கிரதுளையும் கிளாசுக்கு ப்ரிபேர் பண்றதுளையும் அதிக நேரம் போக்குவாங்க.. அது நல்லது தானுங்களே மானவாசுக்கு...
அய்யா அவங்க வேலைய பாக்கட்டும்... நீங்களும் என்னோட சேந்து அய்யாவோட உடம்பும் மனசும் நீண்ட நாள் நிம்மதியா ... திடகாத்திரமா இருக்கணும் அப்டின்னு வேண்டிக்கோங்க உங்க சாமிகிட்ட.. [சார்க்கு சாமி கும்பிடுறதே பிடிக்காது.. கும்பிட்டா விமர்சனம் பண்ணவும் மாட்டாங்க...]
அப்புறம்.. சாரோட நெருங்கிய நண்பர் சிவகுமார் அவர்கள். ஹா.. ஹா....ஹா.. அவங்கள நெனச்சாலே சிருப்புவருதுங்க.....சொல்றேன்...சொல்றேன்...

- சார் ரொம்ப சிம்பிள்... கொஞ்சம் கூட அவங்க வெளித் தோற்றத்திலும் , நடவடிக்கையிலும் ஆடம்பரமே பார்க்க முடியாது.
- அதிகம் பேச மாட்டாங்க. பேச வேண்டிய நெலம வந்தா துப்பாக்கி தோட்டா மாதிரி வார்த்தைகள் வந்து விழும்.
- ஆங்கிலத்துல எவளோ புலமையோ, அதே அளவுக்கு தமிழ்ல புலமை உள்ளவங்கன்றது யாருக்கு தெரியுமோ இல்லையோ எனக்கு நல்லா தெரியும். ஆங்கில இலக்கியம், கவிதைகள், கதைகள், புதினங்கள், கட்டுரைகள், புகழ் பெற்ற திரைப்படங்கள் எல்லாமே அய்யாவுக்கு அத்துப்படி. இதே அளவுக்கு தமிழ் ஆர்வம் இருக்குற ஒரு மனிதர நான் இதுவரைக்கும் பாக்கல. நீங்க எந்த டாபிக் ல பேசுனாலும் சார் தொடர்ந்து தகவல் குடுத்துக்கிட்டே இருப்பாங்க. அந்த காலத்து எழுத்தாளர் கல்கி லேர்ந்து நவீன எழுத்தாளர் ஜெய மோகன் வரைக்கும் அய்யாக்கு அத்துப் படி.
- ஏதாவது புத்தகத்த வச்சு படிச்சுக்கிட்டே இருப்பாங்க.
- பசங்கள என்கரேஜ் பண்ணிகிட்டே இருக்கிறது சாரோட ஸ்பெஷல்.
- தனிப்பட்ட முறையில எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிருக்காங்க. சொல்லிகிட்டே இருக்காங்க. அதுனால தான் நானும் இயங்கிகிட்டே இருக்கேன்.
- இப்ப கூட ஆங்கில இலக்கியத்துல முனைவர் பட்டம் வாங்கிடனும் ன்னு முயற்சி செய்றேன். நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் சேர்ந்த 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நொடி வரைக்கும் என்னை மனிதனாக செதுக்கி வருவதில் முக்கியப் பங்கு அய்யாவுக்கு உண்டு.
- ஐயாவினுடைய ஆங்கிலம் மற்றும் தமிழ் புலமைய இன்னும் யாரும் அந்த அளவிற்கு பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பது நிதர்சனமான உண்மை. சாரும் தன்னுடைய ஆற்றலை முழுமையா இன்னும் என்ன காரணமோ வெளி உலகத்துக்கு தெரியப் படுத்தாம இருக்காங்க. இதுனால இழப்பு அவங்களுக்கு இல்ல. இளைய தலைமுறைக்கு தான்...
இந்த போஸ்ட சார் பாக்குறது சந்தேகம் தாங்க. அவங்க ரொம்ப பிஸி நெஜம்மாவே. அவங்க படிக்கிரதுளையும் கிளாசுக்கு ப்ரிபேர் பண்றதுளையும் அதிக நேரம் போக்குவாங்க.. அது நல்லது தானுங்களே மானவாசுக்கு...
அய்யா அவங்க வேலைய பாக்கட்டும்... நீங்களும் என்னோட சேந்து அய்யாவோட உடம்பும் மனசும் நீண்ட நாள் நிம்மதியா ... திடகாத்திரமா இருக்கணும் அப்டின்னு வேண்டிக்கோங்க உங்க சாமிகிட்ட.. [சார்க்கு சாமி கும்பிடுறதே பிடிக்காது.. கும்பிட்டா விமர்சனம் பண்ணவும் மாட்டாங்க...]
அப்புறம்.. சாரோட நெருங்கிய நண்பர் சிவகுமார் அவர்கள். ஹா.. ஹா....ஹா.. அவங்கள நெனச்சாலே சிருப்புவருதுங்க.....சொல்றேன்...சொல்றேன்...
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!