
தன் சட்டைக்கு வெளியே
சப்தம் செய்கிறது மனசு.
நான் நடமாடும்
கடிகாரமாகி விட்டேன்.
உன்னை எதிரே கண்டவுடன்
என்னுள் எதற்காய்
இத்தனை எச்சரிக்கை மணிகள்?
ஒருமுறை உன் பார்வை ஒட்டிக் கொண்டதால்,
விழி பெற்ற என் இமைகள்
மறு முறைக்காய் என்னை
மன்றாடுகிறது.
ஒவ்வொரு முறை உன் ஓசை
ஓங்கி ஒலிக்கும்போதும் ,
மௌனமாய் நிற்கின்றன எனது
பிற வேலைகள்.
சுவைக்கத் தோணாமல்
பத்திரமாய் பாதுகாக்கிறேன்
புதியதாகவே இருக்கும் நமது
பழைய நாட்களை.
தேனிலும் பூஞ்சை பிடிக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்..
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!