
காலைப் படி மாலைப் படி
நீ படிப்பதற்காய் பிறர் காலைப் பிடித்தபடி
உன் பெற்றோர் ஏறியது எத்தனைப் படி?
செவிக்கு உணவைப் படி
நீ செத்துப் போனது பிறர் படிக்கும்படி
தீபிடிக்க நீ படி
அலறியோடு உயிரை அணைத்தபடி
மாடிப் படி
மரணப் படி
இறங்கியோடு
பிறர் மிதிபடும் படி
ஏன் இப்படி ?
இந்தக் கல்வி ஏணிப்படி
தனியார் பள்ளிகளிலும் கூட தான் இப்படி.
ஓடிப் பிடித்து விளையாடும் படி
நீ ஒதுங்கக் கூட இடமில்லாத படி
உணவுக்காய் நீ படித்த படி
பிறர் உணர்வுக்காய்
உன்னை படித்த படி
கண் எப்படி
உன் கை, கால் எப்படி
கண்ணே மணியே என்றுனை
வளர்த்த தெப்படி
சாகப் படி
சாவே.... நீ சாகப் படி
படித்தவனும்
பிடி சாம்பல் தான் - என்ற
சாரம் படி
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!