9 Dec 2009

இனி இரு ...


ஆளுக்கொரு நிலா வளர்ப்போம்.
அதில் நீ அமாவாசையை அரைத்தெடு;
நான் பௌர்ணமியை குழைத்தெடுக்கிறேன்

நீ கிரணங்களைப் பயிரிடு;
நான் நட்சத்திரங்களை விதைக்கிறேன்.

நீ இருட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்து .
நான் மேகத் தறியால்மேலாடை நெய்து கொள்கிறேன் .

எப்படியாயினும் நீயும் நானும் காலையில்
வெளிச்சத்தில் வெளிப்பட்டாக வேண்டும்.

அப்போது நீயும் நானும்
நிகழ் காலத்திற்கு வந்திருப்போம்.

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!