13 Jan 2010

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...




லட்சக் கணக்கானோர்
தாய் , தந்தை,
சகோதரன், சகோதரி,
உற்றார், உறவினர் மற்றும்
தம் நடப்பு வட்டாரத்தை,
தான் வாழும்
தன் தாய் நாட்டின் அரசாங்கமே
குண்டு வீசி கொன்று குவித்திருக்க,
உண்ணஉணவு,
உடுக்க உடை ,
இருக்க இடம் என்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமில்லாவிடினும் சுதந்திரக் காற்றையாவது
சுவாசிக்க முடியாதா என்று
ஏங்கி நிற்கும் என் தாய் மொழி பேசிடும் மக்கள்,
நான் கூப்பிடு தூரத்திலிருப்பினும்,
ஒன்றும் செய்ய முடியாத கையாலாகதவனாய்
கை கட்டி நின்று கொண்டு
மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும்
உங்களைப் போன்றோரில்
நானும் ஒருவன்..


எப்படிக் கொண்டாடுவேன் இந்நாளை?


எனினும் ஆகாத அதிகாலைப் பனியிலமர்ந்து அடுக்கி அழகாய் நிதானமாய் புள்ளி வைத்து , அத்தனையும் ஒருங்கிணைத்து அற்புதமாய் வண்ணம் தீட்டி, நிமிர்ந்து நின்று தான் வரைந்த கோலத்தை கர்வமாய் பார்க்கும் கன்னியரைப் போல் நானும் நின்று பார்க்கிறேன் நம்பிக்கையோடு....

உள்ளம் தோறும் இன்பம்
உலக மக்கள் எல்லோரும் பெற,
வறட்சி, வெள்ளம் தாக்கா
விளைச்சலை விவசாயிகள் பெற,
தரணியெங்கும் தண்ணீர் பொதுவுடமையாக,
உடலாலும்,மனதாலும்
சுமையற்ற சமச்சீர் கல்வி
மாணவ சமுதாயம் பெற,
எல்லோரும் எல்லாம் பெற
என் மனதார
வாழ்த்துகிறேன்..