

நாம் அனைவரும் வங்கிக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று எழுதிக் கொடுத்து நெடு நேரம் செலவழித்து பணத்தை பெற போராடிய காலத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன இன்று தெருவுக்குத் தெரு நிற்கக் கூடிய நடமாடும் ATM எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரங்கள்.
அவசரத் தேவைக்காக வங்கியில் பணம் எடுக்க ஒருமுறை சென்று அது பூட்டிக் கிடந்ததை கண்டு நொந்து நூடுல்ஸான ஜான் ஷெப்பர்டு பாரன், கடும் ஏமாற்றமடைந்தார். தன்னைப் போல் எத்தனை பேர் இது போல் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பணம் எடுக்க முடியாமல் அவதிப் படுகிறார்கள் என்பதை கண்ட அவரின் சிந்தனையில் உதித்ததே இன்றைய ATM கள்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு. ஜான் ஷெப்பர்டு பாரன் கண்டுபிடித்த முதல் ATM எந்திரம் பார்கிளேஸ் வங்கியால் லண்டனில் 1967 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.
இவர் தனது 84 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவராயினும்,
இவர் பிறந்தது எங்கு தெரியுமா?
இந்தியாவின் ஷில்லாங்கில்!
உங்களைப் போன்றே நானும் பெருமிதமடைகிறேன்..
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!