17 May 2010

பவர் கட்.. (கண்டிப்பாக நம் மாநிலம் பற்றி அல்ல..)




மின் வாரிய ஊழியர்களின் பணிச்சுமையையும் வேதனையையும் யாரும் இதுவரை புரிந்துகொள்ளவே இல்லை. இரவு பகல் பாராமல் மின்சாரத்தை ஓடி ஓடி அலாரம் வைத்தும் வைக்காமலும் நிறுத்துவது என்பது சாதாரணமான காரியாமா என்பதை பேருள்ளம் கொண்டோர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அறிவித்த மற்றும் அறிவிக்கப் படாத மின்வெட்டு இரண்டாலும் முதலில் பாதிக்கப் படுவது இவர்கள் தான். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே மின்சாரத்தை நிறுத்தி குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மின்சாரம் வழங்க இவர்கள் படாத பாடு படுகிறார்கள்.
இவர்களால் பொதுமக்கள் பெரும் பயன்கள் சில:
விசிறி மட்டை , காகித அட்டை கொண்டு காற்றை தமக்கு தாமே தயாரிக்க பழகிக் கொண்டார்கள். மின்சார சுய உதவிக் குழு ஒன்றை சில பகுதிகளில் தொடங்க இருப்பதாகவும் பொதுமக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

சில வீடுகளில் மின்சார வயர்களில் துணிகளை துவைத்து தொங்க விடுவதாகவும் இது தவறு என்று கூறுவோரையும், அதில் தொங்கவிடத் தயாராக இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சியை சேர்ந்த இல்லத்தரசிகளோ-பொதுமக்களும், தாய்மாரும் மின்கட்டணம் செலுத்த வரிசையில் நின்று 'லோல்' படுவதை அறிந்த, தலைவர் அவர்கள், தமது துயரைப் போக்கவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் போய்விடும் என்று குறித்த நேரத்தில் அதிகாலை ஆய்ந்து மணிக்கே எழுந்து சட்னி அரைத்து விடுவதாகவும் இதனால் குறித்த நேரத்திற்கு முன்பாகவே சமையலை முடித்து விடுவதாகவும் சந்தோசப்படுகின்றனர். (சாப்பிடும் பொழுது ஊசிப் பொய் கேட்ட வாடை அடிப்பதாக புகர் கூறும் தைரியம் கணவன்மாருக்கு இன்னும் வரவில்லை)

அய்யயோ ... மின்சாரம் வந்து விடுமே ! என்ற பயத்தில் அவசர அவசரமாக குறித்த நேரத்துக்கு முன்பாகவே திருடர்களும், வழிப்பறிக் கொள்ளையர்களும் தங்கள் பணியை செவ்வனே நிறைவு செய்வது அவர்களுக்கு மன நிறைவாய் இருக்கிறதாம். மின்சார நிறுத்த நேர மாற்றம் , முன்கூட்டியே வெளிப்படையாக பத்திரிக்கைகளில் வெளியிடப் படுவதால் தங்கள் தொழில் விருத்திக்கு பயனுடயாதாக இருக்கும் எனவும் இதனால் நாட்டின் பொருளாதார மந்த நிலையை இல்லாமல் செய்துவிடலாம் எனவும் "தாலிப் பேட்டை தங்க மச்சான்" கருத்து தெரிவித்து உள்ளார்.

மின்வாரிய ஊழியர்களும், உயர் அழுத்த மின்கோபுரங்களின் மீது தைரியமாக ஏறி மிகப் பெரிய துணியை கொண்டு தொடர்ந்து துடைத்து வருவதால், கம்பிகளின் மீது படிந்திருக்கக் கூடிய தூசு தும்பட்டைகள் மட்டுமல்லாமல் , கொஞ்சம் கூட மின்சாரம் பற்றிய பயமின்றி 24 மணி நேரமும் அங்கே குடித்தனம் நடத்தி காக்கை, குருவிகள் போடும் எச்சமும் துடைக்கப் பட்டுவிடுகிறது.

என்றைக்காவது தவறி மின்சாரம் நிறுத்தப் படாவிட்டால், "ஏன் இன்னைக்கு இன்னும் போகல ?" என்று மக்களை புலம்ப வைப்பதோடு, அதற்கான காரணத்தையும் அவர்களையே கண்டுபிடிக்க வைத்து, நீயா ? நானா? போட்டிபோடும் நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்.


(அய்யயோ கரண்ட் போக போகுது.. இருங்க போஸ்ட் பண்ணிடறேன் )

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!