* "அசையாமல் படுத்திருப்பது
அசௌகரியமாகத் தான் இருக்கிறது"
- மௌனத்தின் அடித் தொண்டையில்,
மெல்ல ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
* "அருகே தான் நானும் இருக்கிறேன்
அப்படியொன்றும் தெரியவில்லையே?"
அலுத்துக் கொண்டார்
ஆரோக்கிய ராஜ்.
* 'உனக்கென்னப்பா...
மடிப்புக் கலையாத
மண் தரை; சுகமாகத் தானிருக்கும்.
- நான் சவமான பின்னரும்
சலவைக் கற்களையல்லவா சுமக்கிறேன்?'
* 'சற்றுப் பொறு.
இன்ஸ்டன்ட் சாம்பிராணி
இங்கெப்படி வந்தது?
இன்றைக்கொன்றும் என்
இறந்த நாளில்லையே?'
* ஆரோக்கியராஜ்
அவசரமாய் பதிலளித்தார்.
- 'இது கூடத் தெரியாதா?
இன்றைக்குத் தான்
இறப்புக்குப் பிறந்த நாள்!
இன்றைக்காவது
இனிப்பு கிடைக்கிறதா பார்ப்போம்'.
- இயலாமையை
இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
* கசகசக்கும் சப்தம் கேட்டு
கவனிக்க ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
- பாரம் தாங்க மாட்டாமல்
பதறிக் கொண்டிருக்கிறேன் நான்.
இதென்ன,
பாம்பே ஸ்வீட் ஸ்டால்
பாலித்தீன் பை?
* பேசாமல் இரு.
பிரித்துப் பார்த்தால் தானே தெரியும்?!
- ஆரோக்கிய ராஜுக்கும்
ஆர்வம் தாளவில்லை.
* யார் யாரோ வந்துள்ளனரே?
யாரையாவது அடையாளம் தெரிகிறதா?
- ஆரோக்கிய ராஜ்.
* ஏன் தெரியாமல்?
என் மகன்
என் மனைவி
என் உறவினர்
என் மகனின் சக ஊழியன் செல்வன்.குணாநிதி.
* யாரந்த மரமனிதன்?
பட்டைக்குள் நெற்றி புதைத்து,
காரணமில்லாமல்
கண்களை மூடி
கண்ணீர் வடிக்கிறான்?
கல்லறைத் தோட்ட ஊழியனும்
கட்டையாகத் தானே இருப்பான்?
* மயானக் கொல்லையில் என்ன
மசமசவென பேச்சு?
சட்டெனப் பிரித்தால்
பட்டெனத் தின்கலாமே?
- சந்திரகலாவில் இருந்தார்
சந்தர்ப்பம் புரியாத ஆரோக்கியராஜ்.
* ஜானின் அம்மா நாவில்
ஜனித்தன இரண்டு வார்த்தைகள்.
' ரொம்ப நன்றிப்பா!'
* எந்தக் கேள்விகளுமின்றி
ஏன் இந்தப் பதில்?
- குறுக்கே மறித்தான்
குறும்புக்கார குணாநிதி.
* சுகமோ துக்கமோ
பங்கு கொள்வதில் பிறரின் பங்குமுண்டு.
- அவசர தொனியில்
அள்ளி முடித்திட்டார் அம்மா.
* சவ்வுகளாய் சிதைபட்டான் ஜான்.
முற்றிலும் எதிர்பார்க்கவில்லை
இம் முதிர்ந்த பதிலை.
* பள்ளியிடம் தோற்றுப் போனது
பழகத் தெரியாத கல்லூரி!
* திடீரென கடகடவென சிரித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
சிரிப்பினூடே
சில்லறையாய் சில வார்த்தைகள்.
' கல்லறைத் தோட்டத்தினுள்
சில ஆவிகள் புகுந்துவிட்டன.
அசௌகரியமாகத் தான் இருக்கிறது"
- மௌனத்தின் அடித் தொண்டையில்,
மெல்ல ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
* "அருகே தான் நானும் இருக்கிறேன்
அப்படியொன்றும் தெரியவில்லையே?"
அலுத்துக் கொண்டார்
ஆரோக்கிய ராஜ்.
* 'உனக்கென்னப்பா...
மடிப்புக் கலையாத
மண் தரை; சுகமாகத் தானிருக்கும்.
- நான் சவமான பின்னரும்
சலவைக் கற்களையல்லவா சுமக்கிறேன்?'
* 'சற்றுப் பொறு.
இன்ஸ்டன்ட் சாம்பிராணி
இங்கெப்படி வந்தது?
இன்றைக்கொன்றும் என்
இறந்த நாளில்லையே?'
* ஆரோக்கியராஜ்
அவசரமாய் பதிலளித்தார்.
- 'இது கூடத் தெரியாதா?
இன்றைக்குத் தான்
இறப்புக்குப் பிறந்த நாள்!
இன்றைக்காவது
இனிப்பு கிடைக்கிறதா பார்ப்போம்'.
- இயலாமையை
இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
* கசகசக்கும் சப்தம் கேட்டு
கவனிக்க ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
- பாரம் தாங்க மாட்டாமல்
பதறிக் கொண்டிருக்கிறேன் நான்.
இதென்ன,
பாம்பே ஸ்வீட் ஸ்டால்
பாலித்தீன் பை?
* பேசாமல் இரு.
பிரித்துப் பார்த்தால் தானே தெரியும்?!
- ஆரோக்கிய ராஜுக்கும்
ஆர்வம் தாளவில்லை.
* யார் யாரோ வந்துள்ளனரே?
யாரையாவது அடையாளம் தெரிகிறதா?
- ஆரோக்கிய ராஜ்.
* ஏன் தெரியாமல்?
என் மகன்
என் மனைவி
என் உறவினர்
என் மகனின் சக ஊழியன் செல்வன்.குணாநிதி.
* யாரந்த மரமனிதன்?
பட்டைக்குள் நெற்றி புதைத்து,
காரணமில்லாமல்
கண்களை மூடி
கண்ணீர் வடிக்கிறான்?
கல்லறைத் தோட்ட ஊழியனும்
கட்டையாகத் தானே இருப்பான்?
* மயானக் கொல்லையில் என்ன
மசமசவென பேச்சு?
சட்டெனப் பிரித்தால்
பட்டெனத் தின்கலாமே?
- சந்திரகலாவில் இருந்தார்
சந்தர்ப்பம் புரியாத ஆரோக்கியராஜ்.
* ஜானின் அம்மா நாவில்
ஜனித்தன இரண்டு வார்த்தைகள்.
' ரொம்ப நன்றிப்பா!'
* எந்தக் கேள்விகளுமின்றி
ஏன் இந்தப் பதில்?
- குறுக்கே மறித்தான்
குறும்புக்கார குணாநிதி.
* சுகமோ துக்கமோ
பங்கு கொள்வதில் பிறரின் பங்குமுண்டு.
- அவசர தொனியில்
அள்ளி முடித்திட்டார் அம்மா.
* சவ்வுகளாய் சிதைபட்டான் ஜான்.
முற்றிலும் எதிர்பார்க்கவில்லை
இம் முதிர்ந்த பதிலை.
* பள்ளியிடம் தோற்றுப் போனது
பழகத் தெரியாத கல்லூரி!
* திடீரென கடகடவென சிரித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
சிரிப்பினூடே
சில்லறையாய் சில வார்த்தைகள்.
' கல்லறைத் தோட்டத்தினுள்
சில ஆவிகள் புகுந்துவிட்டன.
