"ரம்-100 ரூவா,
ப்ராந்தி- 250 ரூவா
விஸ்கி- 400 ரூவா"
"எப்புடியா அவனுக்கு மட்டும் இவ்வளோ சீப்பா கெடைக்கிது?"
"அங்க யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்கலாம் அதான்"
"அது சரி.. ராஜா வீட்டுக்கு காசு குடுத்துட்டாங்களாம் தெரியுமா?"
"எவ்வளோய்யா?"
"6 ஓட்டு... 3000 ரூவா.."
"அடப் பாவி! யோகக்காரன்யா அவன்...என்னாய்யா பண்ணான் அவன்?"
"என்னா பண்ணுவான்... அப்புடியே சரக்க வாங்கி அடுக்கி வச்சுட்டான்... 3 நாளு லீவாமுல்ல... எல்லாம் தவிச்சு போவப் போறானுங்க.. இன்னைக்கி செம்ம கூட்டமா, க்யூவல வேற நிப்பானுங்கல்ல?"
-இப்படி என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இருவர் பேசிக் கொண்டு வந்தனர்.
நேரமோ காலை சுமார் 7:45 மணிதான் இருக்கும். ஒரு அரசுப் பேருந்தில் அமர்ந்திருந்தேன்.
எதை எங்கே எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியாமல் இருவரும் கத்திப் பேசிக் கொண்டு வந்தனர்.
மது அருந்துவது அவரவரது விருப்பம். அக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது யார்? விரிவுபடுத்தியது யாரென்ற அரசியலுக்குள்ளெல்லாம் நான் செல்ல விரும்பவில்லை.
இதையெல்லாம் தாண்டிய உண்மை என்னவெனில்,
இளைய சமுதாயம் ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே.
மீண்டும் சொல்கிறேன்.குடிப்பது சரியா,தவறா என்ற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
ஆனால் இப்போது மிகச் சர்வ சாதாரணமாக, நகரின் முக்கிய சாலையின் ஓரத்தில் கூட நின்று அத்தனை பார்க்க அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று ஒரு கூலித் தொழிலாளி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆறேழு பேர் சூழ அமர்ந்து கொண்டு பாட்டிலை எடுத்துக் குடிக்கிறார். ஒரு குழந்தையின் கையில் சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது.
நேற்றைக்கு இரு வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இரு சக்கர வாகனத்தை மது அருந்திவிட்டு ஓட்டியதில் விபத்தில் சிக்கி இருவருக்குமே கால் சிதைந்து வந்திருந்தனர்.
இன்னொருவர் குடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இரண்டு கால்களையும் ஹாயாக இருபுறமும் நீட்டி தொங்கவிட்டுக் கொண்டே போதையில் ஓட்டியிருக்கிறார். இரண்டு கால்களையும் அகட்டி நீட்டியவாறே இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் குடித்துவிட்டு, சைக்கிளில் பால் விற்ற முதியவர் மீது மோதி தள்ளிவிட, ஒன்றுமறியாத ஏழை முதியவர் கால் முறிந்து மருத்துவமனையில் கதறி அழுததைக் கண்டேன்.
இன்னொரு 45 வயது மதிக்கத்தக்க விவசாயி மூக்கில் டியூப் செருகப்பட்ட நிலையில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வருவதைக் கண்டேன். அவரைப் பின் தொடர்ந்து அழுதபடியே ஒயர் கூடையில் துணிகளுடன்ஒன்றுமறியாத அப்பாவி மனைவியும் சிறிய பெண் குழந்தைகள் இரண்டும்...
-இப்படி நிறைய நிகழ்வுகள் ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பான்மையான குற்றச் செயல்களுக்குக் காரணமும் மதுவாகத் தான் இருக்க முடியும்.
அக்கேஷனல் குடிகாரர்கள், அடிக்ட் குடிகாரர்களென இரு வகையினருண்டு.
அடிக்ட் இனத்தவர் காலை 8 மணிக்கெல்லாம் கடை ஷட்டரில் கோலம் போட்டுக் கொண்டு நிற்பர் அல்லது அவர்களுக்கே உரித்தான பாணியில் நினைத்த உடன் பெற்றுவிடுகின்றனர்.
கைகால்கள் உதறலெடுக்க, அவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபப்படும் அதே சமயம்....
Alfred Lord Tennyson எழுதிய “The Lotos-Eaters” நினைவுக்கு வருகிறது.
கடல் வழியே பயணித்து தம் சொந்த நாட்டை அடைய முற்படுகையில் தன்னுடைய வீரர்களுக்கு ஒடிசியஸ் பேச்சால் உத்வேகமளிப்பான்.
"வீரர்களே தைரியமாக இருங்கள்... நம் நாட்டிற்கு திரும்பிவிடலாம். நம் மனைவி மக்களையெல்லாம் சீக்கிரம் சந்திக்கலாம்"-என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மதிய வேளையில் வழியில் அவர்கள் ஒரு தீவை அடைகிறார்கள்.
அங்கிருந்த அனைவரும் வெளுத்த முகங்களுடன் காணப்படுகின்றனர். அவர்கள் தாமரை போன்ற மலரின் இதழ்களையும் இலைகளையும் கொடுத்து அத்தீவிற்கு அனைவரையும் வரவேற்கிறார்கள்.
அதை உண்ட எந்த படைவீரனும் உடனடியாக ஆழ்ந்த போதைக்கு சென்று உறங்கிவிடுகிறான். அருகிலிருக்கும் எவர் பேச்சும் காதில் விழவில்லை. தம்முடைய இதயத் துடிப்பின் சப்தம் மட்டுமே அவர்களுக்கு காதில் விழுகிறது.
யாருக்கும் மீண்டும் தம் நாட்டிற்கு திரும்ப விருப்பமில்லை. எதற்காக போக வேண்டும்? ஏன் மனைவி மக்களை சந்திக்க வேண்டுமென வாக்குவாதம் செய்து, நாடு திரும்ப எத்தனிப்பவர்களையும் தம் பிடிக்குள் கொண்டு வந்துவிடுகின்றனர்.
போதையிலிருந்து தெளிதல், மீண்டும் இலையையும் பூக்களையும் உண்ணல், போதை உலகிற்கு திரும்புதல்-இப்படியாக கழிகிறது அவர்கள் வாழ்க்கை.
- இது போன்று தான் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்வும் இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது.
#கடவுள்_காப்பாற்றுவார்_என்ற_நம்பிக்கையில்