நேற்று மதியம் பிற்பகல் ஒரு மணியளவில் சுட்டெரிக்கும் வெயிலில், என் எதிரே அதி பயங்கர வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மணல் சறுக்க, கரடு முரடான கற்களில் வாகனத்தோடு பெருத்த சப்தத்தோடு விழுந்து எழவே இல்லை.
சற்று தொலைவில் வாகனத்திலிருந்து சப்தம் கேட்ட நான், சாலையில் அந்த நேரத்தில் யாரையுமே காணாத காரணத்தால், என் வண்டியை அப்படியே ஓரமாக நிறுத்தி விட்டு ஓடி சென்றேன் அவனை தூக்க. என்னைப் போலவே சற்று தொலைவிலிருந்த வீட்டு வாசலிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான்.
"அப்பாவ கூப்டு தம்பி.."- என நான் அவனிடம் கத்த, அவன் தந்தையை அழைக்க, அவர் ஓடி வர, சாலையில் வந்த சற்றே வயதான தம்பதியரும் வண்டியை நிறுத்த,
நான் விழுந்த வாலிபனின் இரண்டு கால்களையும் மெல்ல தூக்கிக் கொண்டு, கூட நின்ற இரண்டு பெரியவர்களை அவனது தலையை தூக்க சொன்னேன். வாயிலிருந்து ரத்தம் குபுகுபுவென வந்து கொண்டிருந்தது.
இருவரும் பயத்தில் உறைந்து போய் தலையை பிடிக்க தடுமாறினார்கள்.
"சார்.. வெயில் அதிகமா இருக்கு..ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..அந்த மரத்தடியில வச்சுக்கலாம்"- என்றேன்.
"தூக்க முடியல சார்"- என்றார் ஒருவர்.
எனக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
"சார் ரெண்டு பேரும் சேர்ந்து புடிங்க சார்... அதிகமா ரத்தம் போகுது.கொஞ்சம் நிமித்தி நிழல்ல வச்சுப்போம்" என ரொம்பவே கெஞ்ச, நடுக்கத்தோடு தூக்கி வந்தனர்.
108 க்கு போன் பண்ணுங்க என ஒருவரிடம் சொல்லிக் கொண்டு நான் அவனை சற்றே நிமிர்த்தி காலில் வைத்துக் கொண்டேன்.
108 இல் நிறைய கேள்விகளைக் கேட்க, பொறுமையிழந்த பெரியவர், "என்னைய்யா... இந்த ஊருல இருந்து கிட்டு இவ்வளோ கேள்வி கேக்குற சீக்கிரம் வாய்யா..."-என கத்த ஆரம்பிக்க..
நான் அப்டி பேசாதீங்க சார்... அவங்க இங்க இருக்க மாட்டாங்க... அட்ரஸ் மெதுவா தெளிவா சொல்லணும்..இருங்க நான் சொல்றேன் என போனை அவரிடம் வாங்கும் முன்,
அருகில் நின்ற இன்னொருவரிடம் கொஞ்சம் இவர பிடிங்க... என ஒப்படைத்து விட்டு, பேச ஆரம்பிக்கு முன், அந்த இளைஞனை தரையில் ஒரு சிறு ஒலியோடு விட்டுவிட்டார்.
"என்ன சார்.. இப்டி பண்றீங்க? என நொந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
அவனது வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த ரத்தம் சற்றே நின்றது. உயிர் இருந்தது என்றாலும் கண்ணைத் திறக்கவே இல்லை. லேசான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தான்.
பாக்கெட் ஏதுமில்லாத ஒற்றை பெர்முடாஸ் மற்றும் பாக்கெட்டில்லாத டீஷர்ட் போட்டவனின் அடையாளம் அறிவது மிகப் பெரிய சவாலாயிற்று...
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தாலும், அவ்வழியே சென்ற ஆட்டோ,கார் எதுவும் நிற்கவே இல்லை..
108 க்கு தெளிவாக முகவரி சொல்லியாயிற்று... அடுத்து என்ன என ஒவ்வொரு நொடியையும் பதைப்போடு நகர்த்தும் போது ஒருவர் அவர் வாயில் தண்ணீரை ஊற்றினார். மூச்சுவிட சிரமப்படுகிற அடிப்பட்டு முற்றிலும் மயங்கிக் கிடக்கிற ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பதில் உள்ள சிக்கலை அறியவில்லை. தடுத்தால் முறைத்தார்.
இன்னொரு வாலிபன் சொன்னான். "அவன் வண்டி டேங்க் கவர்ல செல் இருக்கான்னு பாருங்க"- என்று...
கவிழ்ந்து கிடந்த வண்டியில் மிகச் சரியாக அவனது செல் இருந்தது.எடுத்தேன்.
கடைசியாக அவன் பேசிய அழைப்பிற்கு என்னை பேசச் சொன்னார்கள்.
அது தாயோ,தந்தையோ,சகோதரியோ, காதலியோ,உற்ற நண்பனோ-எனக்குத் தெரியாது. இதைத் தெரிவிக்கும் திடம் என் மனதில் அப்போது இல்லை. நீங்களே பேசுங்க சார் ப்ளீஸ்- என ஒரு பையனிடம் கொடுத்தேன். அவன் யார் யாருக்கோ தெரிவித்தான். இவன் குறித்து விசாரித்தான். என் கவனம் முழுக்க, ஆம்புலன்ஸ் வருகையில் தான் இருந்தது.
அவனே சொன்னான்.. "இவர் கோயம்புத்தூராம்.. இங்க எங்கயோ வந்துருக்காராம் என சொல்லி, பெயரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆம்புலன்ஸ் வந்தது. ஏற்றினர். வாலிபர் உயிரோடு கொண்டு செல்லப்பட்டு வண்டி நகர்ந்ததும் மன நிறைவோடு கடந்த என்னை, கூட நின்ற ஒருவர் என்னைக் கேட்டார்...
"சார்.. மொதல்ல யாரு பாத்தது?"-அவர்.
" நான் தான் சார்.." - நான்.
" நீங்க எங்க எப்புடி பார்த்தீங்க சார்?"-அவர்.
"நான் எதிர்தாப்புல போயிகிட்டு இருந்தேன் எங்க அம்மாவோட... என்னத் தாண்டி இங்கிட்டு வந்ததும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்.. மண்ணுல சறுக்கி கீழ விழுந்துருந்தார் சார்..."- நான்.
"ஒரு வேள நீங்க எதும் மோதுனீங்களோ வேகத்துல?"- என்றார்.
நொறுங்கிப் போனேன் நான்...
என் பின்னே தூரத்தில் வண்டியில் வந்த தம்பதியினரில், பெண்மணி வந்து சொன்னார்..
"அட ஏங்க... நாங்களும் பாத்துகிட்டு தான் வந்தோம்.. யாருமே இல்லாத ரோட்டுல வெரட்டிகிட்டு வந்து தானா உருண்டான்.. இந்த தம்பி தான் தூக்கிச்சு.. நீங்க வேற.."-என்றார்.
----------------
-இதனால் தான் யோசிக்கிறார்களா விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற? - என்ற கேள்வியோடு, இன்னும் சில கேள்விகளும் எனக்குள் எழுகிறது.
1. வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதை கடுமையாக்குவதும்,விபத்திலோ முறைகேடோ செய்தது நிரூபிக்கப்பட்டால், ரத்து செய்வதும் உண்டா இல்லையா?
2. பள்ளி,கல்லூரிகளில் எந்தப் பாடம் படித்தாலும், போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த பாடத்திட்டத்தை கட்டாயமாக சேர்த்தாலென்ன? அதில் செய்முறையுடன் கூடிய தேர்வில் வென்றால் தான், படிக்கும் படிப்பு முழு வெற்றி என அறிவித்தாலென்ன?